பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்வைத்த பட்ஜெட் யோசனையை, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இணைந்து தோற்கடித்த சம்பவம், இன்று (05) இடம்பெற்றுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபையின் (ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன) தலைவரினால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட யோசனைகளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏழு உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 19 பேரும் இணைந்து, ஒன்பது மேலதிக வாக்குகளால் தோற்கடித்துள்ளனர்.
இலங்கையில், இருக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் எல்பிட்டிய பிரதேச சபை மட்டுமே தற்போது செயற்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.