கடந்த 2009 ஆம் ஆண்டு மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் ,ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு 14 வருடங்களின் பின்னர் மன்னார் மேல் நீதிமன்றம் நேற்று (06) புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்தே மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 02 -10-2009 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பணியில் இருந்த இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.