இந்த வருடத்தில் மாத்திரம் மூன்று தடவைகள் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதற்கான துறைசார் கண்காணிப்புக் குழு, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வந்து இவ்விடயத்தை முன்வைக்குமாறு அறிவித்துள்ளது.
இதன்படி, ஆணைக்குழுவின் தலைவர் பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை நாளை(07) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு வருமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயலாளர் அறிவித்துள்ளார்.