டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு “அஞ்சாமை” என தலைப்பிடப்பட்டுள்ளது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அஞ்சாமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விதார்த், வாணி போஜன் குழந்தைகளுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படமும், இவர்களின் பின்னணியில் நீட் கொடுமையை எடுத்துரைக்கும் செய்தி அடங்கிய செய்தி தாள் தீயில் எரியும் படமும் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம்சுதர்சன் மேற்கொண்டுள்ளார். ஜி.சி. ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பாடல்களை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் நீட் பரிச்சையின் மூலம் மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். தற்பொழுது சூழ்நிலையில் கல்வி எப்படி வியாபாரமாக்கப் படுகிறது என்பதை மையமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும் என இயக்குனர் எஸ்.பி சுப்புராமன் கூறியுள்ளார்.