Friday, November 22, 2024
Google search engine
Homeஇலங்கைவாள் உற்பத்தி செய்வோரை கைது செய்ய வேண்டும் - யாழ். மாவட்ட செயலர்

வாள் உற்பத்தி செய்வோரை கைது செய்ய வேண்டும் – யாழ். மாவட்ட செயலர்

யாழ்ப்பாணத்தில்  வாள்  உற்பத்தியில் ஈடுபடுபவர்களை கைது செய்யுமாறு  தான் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கூறியதாக, யாழ்.மாவட்ட செயலர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  “யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு கலாச்சாரம், மற்றும் போதைவஸ்து பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த  அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில்  பொலிஸாருடனான கலந்துரையாடலில்  வாள்வெட்டு கலாசாரத்தை தடுக்க வாள் உற்பத்தியாளர்களை கைது செய்யுங்கள் எனத் தெரிவித்தேன்.

நாங்கள் வழிதவறாமல் செல்வதற்கு நம்பிக்கையூட்டும் வகையில் எமது வாழ்க்கை முறை இருக்க வேண்டும். எமது வாழ்க்கை முறையை சரியாக கொண்டு சென்றாலே  எதிர்கால சந்ததிகள் முறையான, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவார்கள்”  என அவர்  மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments