பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் ராணுவ முகாம், போலீஸ் நிலையங்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்தநிலையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் ராணுவத்தினர் ரோந்து பணி மேற்கொண்டனர். லக்கி மார்வார்ட் நகரில் சென்றபோது அந்த வாகனத்தை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் ராணுவ வீரர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையே தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.