ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அர்பன்ரைசர்ஸ் ஐதராபாத் – மணிப்பால் டைகர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அர்பன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் ரிக்கி கிளார்க் 80 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மணிப்பால் டைகர்ஸ் அணி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மணிப்பால் டைகர்ஸ் அணி தரப்பில் அசேல குணரத்ன 51 ரன்னும், ராபின் உத்தப்பா 40 ரன்னும் எடுத்தனர்.