தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை கனமழை கொட்டித் தீர்த்தது. கூடலூரில் இரு வயல் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்த சூழலில் இன்றும் அங்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரியில் உள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.