தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி(நாளை) போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டது கண்டறியப்பட்டதால் 15-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை அமலாக்க துறையினர் மூடிய நிலையில், பொதுப்பணித்துறையே ஆறுகளில் இருந்து நேரடியாக மணலை எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தியது.
இந்த நிலையில், மணல் குவாரிகள் இதுவரை திறக்கப்படாததை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.