Friday, October 4, 2024
Google search engine
Homeகனேடியமேட்டுப்பாளையம் – உதகை மலை ரெயில் சேவை 15-ந்தேதி வரை ரத்து

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரெயில் சேவை 15-ந்தேதி வரை ரத்து

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்லார் – ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்தது. ரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவதில் ரெயில்வே ஊழியர்கள் சிரமத்தை சந்தித்தனர். மண்சரிவு அகற்ற காலதாமதம் ஏற்பட்டதால் மலை ரெயில் சேவை வரும் 6ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் – உதகை மலை ரெயில் சேவை மேலும் சில தினங்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முடியாததால் வருகிற 15-ந்தேதி வரை ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments