உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்தநிலையில் குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவாலா கூறுகையில், “குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவி உள்ளது. நாட்டு மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் முயற்சியில் தடுப்பூசி உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.