நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் இன்று (செப்.5) காலை உலகம் முழுவதும் வெளியானது.
வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
வெளிநாட்டில் கோட் திரைப்படத்தை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
நடிகர் விஜய் பல புதிய தோற்றங்களில் கோட் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது இதுவரை வெளியாகாத விஜய்யின் புதிய தோற்றம்கொண்ட புகைப்படத்தை நடிகர் மகத் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படம் ஹாலிவுட்டில் பிரபலமான வுல்வரின் தோற்றத்தில் நடிகர் விஜய் இருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.