Saturday, September 21, 2024
Google search engine
Homeஇந்தியாதமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதி – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த 29 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சத்திற்கான காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.09.2024) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து, தென் கொரியாவில் நடைபெற உள்ள 2024 உலக டேக்வாண்டோ ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள வீராங்கனை ஆர்.ஜனனிக்கு செலவீனத் தொகையாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

மேலும் கம்போடியாவில் 06.10.2024 முதல் 13.10.2024 வரை நடைபெற உள்ள ஆசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள 5 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மற்றும் உஸ்பெக்கிஸ்தானில் 24.09.2024 முதல் 29.09.2024 வரை நடைபெற உள்ள கிக் பாக்ஸிங் உலக கோப்பைப் போட்டியில் பங்கேற்க உள்ள 11 வீரர், வீராங்கனைகளுக்கு செலவீனத் தொகையாக தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

ஸ்பெயினில் நடைபெற உள்ள உலக ஸ்ட்ராங்மேன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள டி.கண்ணனுக்கு செலவீனத் தொகையாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையினையும், உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற உள்ள 8-வது ஆசிய பென்காக்சிலாட் 2024 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள 7 வீரர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் மற்றும் சீனாவில் 28.09.2024 மற்றும் 29.09.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள WDSF (World DanceSport Federation) உலக பிரேக்கிங் நடன விளையாட்டு யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள பிரேம் காந்தி மற்றும் ஆராதனா ஆகியோருக்கு செலவீனத் தொகையாக தலா ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை மற்றும் அ.கருணாசாகர், ஆர்.பிரணவ்சாய் இருவக்கும் ஸ்கேட்டிங் உபகரணங்கள் வாங்குவதற்காக தலா ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையினை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments