அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நாடு தழுவிய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெறத் தொடங்கியிருந்தாலும், டிரம்ப் ஆளும் ஜனநாயக கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார். .அவரிடம் 2028 தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டார்.
இதற்கு டிரம்ப் கூறுகையில்,
2024-ல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வி அடைந்தால் 2028-ல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. இதுவே கடைசி தேர்தலாக இருக்கும். இந்த முறை நிச்சயம் வெல்வேன் என நம்புகிறேன். நான் அதிபராக இருந்தபோது உருவாக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளின் வளர்ச்சிக்காக பெருமை அடைகிறேன். நான் இப்போதும் நல்ல ஆரோக்யத்துடனும், நேரம் தவறாத உணவு பழக்கத்தையும் கடைபிடித்து வருகிறேன் என்றார்.