நாசா மற்றும் ரஷிய விண்வெளி வீரர்கள் 3 பேருடன் சென்ற சோயுஸ் எம்எஸ்- 25 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. கொனோனென்கோ மற்றும் ட்ரேசி டைசன், நிகோலய் சப் ஆகிய 3 பேருடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது சோயுஸ் எம்.எஸ்.-25 விண்கலம். அதில் அமெரிக்க வீரர் ஒருவர், ரஷிய வீரர்கள் 2 பேர்.
பாராசூட் உதவியுடன் கஜகஸ்தானின் கசாக் புல்வெளியில் வெற்றிகரமாக தரையிறங்கியது சோயுஸ் விண்கலம். ரஷியாவின் கொரோனோனென்கோ, நிகோலய் சப் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில், அதிக நாட்கள் (374) தங்கியவர்கள் என்ற புதிய சாதனை படைத்துள்ளனர். எக்ஸ்பெடிஷன் 71 வது குழு பூமி திரும்பியதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.