மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் பிரபு நடித்துள்ள ராஜபுத்திரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
அதில் நடிகர் பிரபு புல்லட்டில் செல்லுவது போலும் அதற்கு பின்னால் நடிகர் வெற்றி சைக்கிளில் வருவதுப் போல் காட்சி அமைந்துள்ளது. இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார்.கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபுவுடன் வெற்றி , தங்கதுரை, மன்சூர் அலிகான் மற்றும் இமான் அண்ணாச்சி நடித்துள்ளனர்.
ராஜபுத்திரன் திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. நவ்ஃபால் ராஜா இசையமைக்க ஆலிவர் டெனி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.