வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.
தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். படத்தில் நடிக்கும் நடிகர்களை இன்று முதல் 3 நாட்களுக்கு அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
அதேப்போல் முதலாவதாக அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அது மட்டுமல்லாமல் பாபி த்யோல் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். பட பூஜை விழா வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.