இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக ஜெய் ஷா கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார். டிசம்பர் மாதம் ஐசிசியின் தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்றுக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த பிசிசிஐ செயலாளர் யார் என்பது குறித்து கேள்வி எழுந்தது..
இந்த பதவிக்கு முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் மத்திய மந்திரி அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால், முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் எதிரொலித்தன.
இந்நிலையில் , அருண் ஜெட்லியின் மகனும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ரோகன் ஜெட்லி, பிசிசிஐ-ன் புதிய செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.