உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா , கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய எலினா ரிபாகினா 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் சபலென்கா தொடரிலிருந்து வெளியேறினார் .