தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 7 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாத புரம், தஞ்சை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.