Thursday, November 21, 2024
Google search engine
Homeஇந்தியாநடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று விசாரணை

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்குமா? – இன்று விசாரணை

பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளித்த புகாரின்பேரில், எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதனால் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் அவரது வக்கீல் குழு புழல் சிறைக்கு சென்று கஸ்தூரியை சந்தித்தார். பின்பு அவரது வக்கீல் டி.ஆர்.பிரபாகரன் கூறுகையில், ‘நடிகை கஸ்தூரிக்கு முறையாக சம்மன் வழங்காமல் போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். ஜாமீன் கேட்டு எழும்பூர் கோர்ட்டில் மனு கொடுத்துள்ளோம். விரைவில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும்’ என தெரிவித்தார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments