நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் வெளியானது.
‘Nayanthara Beyond the Fairy Tale’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், கடந்த 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிட்டது.
இந்நிலையில் தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதே சமயம் நயன்தாரா- விக்னேஷ் சிவன் பதிவுக்கு, நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து எந்த பதிலும் தற்போது வரை வரவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசிய கஸ்தூரி ராஜா, “எங்களுக்கு வேலை தான் முக்கியம். நிற்க நேரமில்லாமல் நாங்கள் ஓடி கொண்டிருக்கிறோம். எங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் குறித்து பதில் கூற எங்களுக்கு நேரமில்லை. என்னைப் போலவே எனது மகனுக்கும் வேலை தான் முக்கியம்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “நயன்தாரா தடையில்லா சான்றிதழ் பெற 2 ஆண்டுகள் தனுசுக்காகக் காத்திருந்ததாக கூறியது எல்லாம் பொய். இது தொடர்பாக இதற்கு மேலும் பேச எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்தார்.