திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள குருவராஜ கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் அரிகிருஷ்ணன் (33 வயது). அவரது மனைவி அமுலு (27 வயது). இவர்களது 3 வயது பெண் குழந்தை வெங்கடலட்சுமிக்கு நேற்று காலை வீட்டில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து ஊட்டியுள்ளனர். அப்போது, குழந்தைக்கு திடீரென புரையேறி மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தை வெங்கடலட்சுமியை மீட்டு, சிகிச்சைக்காக செங்குன்றம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.