தொடர்ந்து பெய்யும் பலத்த மழையால் நாட்டிலுள்ள 50 இற்கும் மேற்பட்ட பிரதான நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80 வீதம் வரை உயர்வடைந்துள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் சுதர்ஷனி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மல்வத்து ஓயாவை பயன்படுத்தும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
நில்வலா கங்கையின் தாழ்நிலப் பகுதிகளிலும் தொடர்ந்தும் வௌ்ள அபாயம் உள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.