இலங்கையின் கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முயன்ற சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை தரப்பில் அனுமதி மறுத்துள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
மற்றொரு சீன அதிநவீன ஆராய்ச்சிக் கப்பல் Xiang Yang Hong 3, இலங்கை மற்றும் மாலைதீவு உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் எதிர்வரும் ஜனவரி முதல் மே மாதம் வரை ஆய்வுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆய்விற்கான அனுமதியை இலங்கை மற்றும் மாலைதீவுகளிடம் இருந்து சீனா முறைப்படி கோரியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஹிந்துஸ்தான் டைம்ஸின் சமீபத்திய அறிக்கையின்படி, சீனக் கப்பலின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையைப் பதிவுசெய்துள்ளது, இரு தீவு நாடுகளையும் சீன கப்பல் நுழைவதை தடுக்குமறு வலியுறுத்துகிறது.
Xiang Yang Hong 03 கப்பல் தற்போது தென் சீனக் கடலில் உள்ள Xiamen கடற்கரையில் இருப்பதாகவும், அனுமதியைப் பெற்ற பிறகு மலாக்கா வழியாக இந்த நாடுகளுக்குச் செல்லும் என்றும் அது தெரிவித்துள்ளது.
விஞ்ஞான ஆய்வு என்ற போர்வையில் உளவு பார்க்கும் இந்த ஆராய்ச்சிப்பணியை சீனா பயன்படுத்துவதாக இந்திய ஊடகங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளன.