Monday, December 23, 2024
Google search engine
Homeசினிமா2024 ரீவைண்ட்: ரசிகர்களுக்கு பேரிடியான ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்தும்...

2024 ரீவைண்ட்: ரசிகர்களுக்கு பேரிடியான ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்தும்…

இந்த ஆண்டில் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் என நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார்.

ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு வலம் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் காதலை பகிர்ந்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார்.

இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தி விட்டது என்றும், இந்த கடினமான காலக்கட்டத்தில் மக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டார்.

இதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு இடையேயான 29 ஆண்டு கால திருமண வாழ்வு முறிந்துள்ளது. எப்போதுமே சினிமா பிரபலங்கள் விவாகரத்து முடிவில் இருக்கும் சமயம் சண்டை, சச்சரவு, தகராறு, மோதல் என அரசல் புரசலாக ஏதாவது ஒரு தகவல் வெளியாகும். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு இடையே இதுவரை எந்த சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டதாக யாருமே அறியாத நிலையில், திடீரென சாய்ரா பானுவின் இந்த பிரிவு அறிவிப்பு இந்திய சினிமாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே முப்பது ஆண்டுகளை எட்டுவோம் என்று நம்பியிருந்த நிலையில், முடிவை எட்டியிருக்கிறது திருமண வாழ்க்கை என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக பதிவிட்டு இருந்தார். மேலும் ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு அவரிடம் பல வருடங்களாக துணை பாடகியாக பணியாற்றும் மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் கூறுகையில், “என் அப்பா ஒரு லெஜண்ட். இத்தனை வருடங்களில் அவர் இசைக்கு அளித்த பங்களிப்பிற்காக மட்டுமல்ல, அன்பு, மரியாதை, தகுதி அடிப்படையிலும் அவ்வாறு அழைக்கப்படுகிறார். கண்மூடித்தனமான பொய்களையும் வதந்திகளையும் பார்க்கும் போது மனமே நொறுங்கி போகிறது. ஒருவரின் வாழ்க்கை குறித்து பேசும் போது உண்மை மற்றும் மரியாதை குறித்தும் நாம் கவனம் கொள்ள வேண்டும். பொய் தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றார்.

இதனை அடுத்து விவாகரத்து முடிவு குறித்து முதல் முறையாக ஆடியோ மூலம் சாய்ரா பானு விளக்கம் அளித்தார். அதில், நாங்கள் இன்னும் விவாகரத்து முடிவை அறிவிக்கவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் மும்பையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். சென்னை வந்தபிறகு தான் விவாகரத்து குறித்து பேசி முடிவு செய்வோம். ஏர்.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரை பார்க்க முடியாது. என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments