இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்பொழுது SK23 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவீஸ் தயாரித்து வருகிறது.
மேலும் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் மற்றும் டேன்சிங் ரோஸ் ஷபீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் படத்தை இயக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் SK23 திரைப்படம் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் சிக்கந்தர் திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு இப்படத்தை தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
SK23 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொன்கரா இயக்கத்தில் SK 25 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை விழா நேற்று நடைப்பெற்றது. இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் அதர்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.