ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. பெட்ரோல் பங்க் தீ விபத்தில் சிக்கி பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், பெட்ரோல் பங்கில் பிடித்த தீயை அணைக்க போராடி வருகின்றனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் பெட்ரோல் பம்பில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி வந்து மோதியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சந்திக்க முதல்-மந்திரி பஜன் லால் சர்மாவும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.