6-வது ஆக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் – கோனாசிகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோனாசிகாவை வீழ்த்தியது.
பெங்கால் அணியில் ருபிந்தர் பால் சிங்கும் (31-வது மற்றும் 48-வது நிமிடம்), கோனாசிகா தரப்பில் மன்பிரீத் சிங்கும் (32-வது நிமிடம்) கோல் அடித்தனர். இன்று இரவு 8.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சூர்மா ஆக்கி கிளப் – உ.பி. ருத்ராஸ் அணிகள் மோதுகின்றன.