சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் வரும் 21-ந்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற இருந்தது. இதனிடையே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள பாதிப்புகள் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“கனமழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நிலவும் தீவிர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 21.12.2023 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவிருந்த “அட்வென்ட் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை” ரத்து செய்ய தமிழ்நாடு கவர்னர் மாளிகை முடிவு செய்துள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.