Monday, December 23, 2024
Google search engine
Homeஇந்தியாஜனநாயகத்தின் மீது மோடி அரசு தாக்குதல் - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

ஜனநாயகத்தின் மீது மோடி அரசு தாக்குதல் – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்திச் செய்ய வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இருக்கும் சிசிவிடி, வெப் கேமரா போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று பரிசோதிக்க முடியும். இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் நடத்தை விதி 93 (2) (a)-ன் படி ‘தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என்ற விதி நடைமுறையில் இருக்கிறது.

இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, விதி 93 (2) (a) கீழ், ‘தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என திருத்தம் செய்து மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டப் பிரிவில் குறிப்பிட்டுள்ள ‘காகித ஆவணங்களை மட்டுமே புகார் தாரர்கள் பார்க்க முடியும்’ என அதிகாரிகள் தெளிவுப்படுத்துகின்றனர். இதன் அடிப்படையில், வேட்புமனு படிவம், தேர்தல் முகவர்கள் நியமனம், முடிவுகள் மற்றும் தேர்தல் கணக்கு அறிக்கைகள் போன்றவை மட்டுமே பொதுமக்களால் பார்க்க முடியும். சிசிடிவி உள்ளிட்ட மின்னணு ஆவணங்கள் எதுவும் தனியாக அதில் குறிப்பிடப்படவில்லை. எனவே, மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது.

இதன் மூலம், வாக்குச்சாவடி மைய சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை யாரும் எளிதில் பார்வையிட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளும் சூழல் தடுக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில், இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

முன்பு, தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் குழுவில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை மோடி அரசு நீக்கியது. இப்போது, ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு கூட தேர்தல் தகவல்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு தடவையும் தேர்தல் முறைகேடுகளை பற்றி காங்கிரஸ் கட்சி புகார் கூறும்போதெல்லாம், தேர்தல் கமிஷன் ரகசிய குரலில் பதில் அளிக்கும். அந்த புகார்களை ஒப்புக்கொள்ளக்கூட மறுக்கும்.

எனவே, தேர்தல் கமிஷன் சுதந்திரமாக செயல்படவில்லை என்று இந்த திருத்தம் மீண்டும் நிரூபிக்கிறது. தேர்தல் கமிஷனின் நாணயத்தை அழிக்க மோடி அரசு திட்டமிட்ட சதியில் ஈடுபட்டுள்ளது. இது, அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகம் மீதான தாக்குதல் ஆகும். ஆனால் நாங்கள் அவற்றை பாதுகாப்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments