கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் 2 வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 2-வது நாளாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் வங்கிகளின் பங்களிப்புடன் மேலும் ஒரு வாகனத்தில் ரொட்டி, குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட், ரஸ்க், போர்வை, துண்டு, குளியல் சோப்பு மற்றும் சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனுப்பிவைத்தார்.
அப்போது கூடுதல் கமிஷனர் லலிதா, இணை கமிஷனர் ஜி.எஸ்.சமீரன், துணை கமிஷனர் சரண்யா அறி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.