ரஷிய அதிபர் புதின் இந்தியா வருவதாக அந்த நாட்டு வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ள நிலையில், புதினின் உடல் நிலை குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரான்சில் நடந்த நிருபர்கள் சந்திப்பு ஒன்றில், ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘ரஷிய அதிபரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவரது காலத்துக்கு பின்னர்தான் ரஷிய-உக்ரைன் போர் முடிவுக்கு வரும்’ என்றார்.