Thursday, April 3, 2025
Google search engine
Homeஇந்தியாகிப்லி டிரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி

கிப்லி டிரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி

ஜப்பானைச் சேர்ந்த கிப்லி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த அனிமேஷன் திரைப்படங்கள் மிகவும் பிரபலம். இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிப்லி என்ற பெயர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் ஓபன் ஏ.ஐ.யின் சாட் ஜிபிடி தளத்தில் நமது புகைப்படங்களைப் பதிவேற்றி கிப்லி அனிமேஷன் போன்று தயாரித்துத் தருமாறு கோரிக்கை வைத்தால், ஏ.ஐ. நமக்கு கிப்லி பாணியிலான புகைப்படங்களைத் தயாரித்து கொடுத்துவிடும்.

இதையடுத்து உலகம் முழுவதும் பலரும் தங்களது புகைப்படங்களை கிப்லி புகைப்படங்களாக மாற்றி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்தும் கிப்லி புகைப்படங்களால் நிறைந்துள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த கிப்லி டிரெண்டில் இணைந்துள்ளார். கிப்லி பாணியிலான தனது புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து ஸ்டுடியோ கிப்லி உலகம் வரை – எனது மிகவும் மறக்கமுடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments