தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞர் நேற்று மாலை கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தனர். ஆனால், இளைஞரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை தொடங்கினர். விசாரணையில் கொல்லப்பட்ட இளைஞர் தில்ஷித் (வயது 20) என்பதும் ரூ. 500 பணத்திற்காக அவர் கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
தில்ஷித் இடமிருந்து 500 ரூபாய் பணத்தை திருட இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் முயற்சித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் தில்ஷித்தை 3 பேரும் கத்தியால் குத்திக்கொன்றனர். இதையடுத்து தில்ஷித்தை கொலை செய்த சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.