Thursday, April 24, 2025
Google search engine
Homeசினிமா"சொட்ட சொட்ட நனையுது" படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியீடு

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியீடு

ஆல்டர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்ஷன், நிதின் சத்யா, மா.க.ப ஆனந்த், KPY புகழ், தீனா, பாலா, பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன், இசையமைப்பாளர் ஜிப்ரான், தீபக், தயாரிப்பாளர் சி.வி குமார், லிப்ரா ரவிச்சந்திரன், மற்றும் நடிகை செளந்தர்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கம் வழியே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோவை வெளியிட்டுள்ளனர்.

இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை, ஒரு கலக்கலான கமர்ஷியல் படமாக சிரிக்க சிரிக்க வைக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும் தான் இப்படத்தின் மையம். அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் s ஃபரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கலக்கப்போவது யாரு புகழ் ராஜா இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

இப்படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஷோ நடிக்கிறார். ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணியும், அறிமுக நடிகை ஷாலினியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மேலும் சிலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments