இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் நடித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான தீமா தீமா பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.
இந்நிலையில், LIK திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது.