இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தை இயக்கியர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் அடுத்து தனுஷை வைத்து ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தையும், ‘மெர்குரி’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இதனிடையே, ‘பெரியார்’ படத்தில் அறிஞர் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், பொம்மை நாயகி, மகாராஜா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
எஸ்.எஸ்.ஸ்டான்லி மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.