மாத்தறை சிறைச்சாலையில் நோய் அறிகுறிகளுடன் இருந்த மேலும் 8 கைதிகள் நேற்றிரவு (23) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி மாத்தறை பொது வைத்தியசாலையில் தற்போது 16 கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் இருவர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கைதியின் உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.