நத்தார் பண்டிகையை முன்னிட்டு கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வாழ்த்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
நத்தார் பண்டிகைக் காலத்தில் வேறுபாடுகளிலிருந்து பலத்தைக் காண்போம் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
எம்மை நாம் நேசிப்பது போன்றே அயலவர்களையும் நேசிப்போம். நெருக்கடியான தருணங்களில் ஏனையவர்களுக்கு உதவ வேண்டும்.
விடுமுறைக் காலத்தில் தனிமையில் இருப்பவர்களை இணைத்துக்கொண்டு கொண்டாடுவோம். பெறுவதனை விடவும் கொடுப்பதில் இறைவனின் ஆசியை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.