கனடிய இரத்த வங்கியில் பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடுறைக் காலத்தில் மேலதிகமாக இரத்தம் தேவைப்படுவதாக இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
சுமார் 30000 குருதிக் கொடையாளிகளின் இரத்த தானம் செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
விபத்துக்கள், புற்று நோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க இவ்வாறு இரத்த தானம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக் காலத்தில் மக்கள் இரத்த தானம் செய்யும் நடவடிக்கைகள் குறைவடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..