யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதி வேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று நாயாற்றுவழி பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியதில் 8 மாடுகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த காயமடைந்துள்ளன.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாலம்பன் கிராமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் மாடுகளை அடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அதி வேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து மாடுகளின் மீது மோதிய நிலையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பஸ் சாரதியின் கவனயீனமே குறித்த விபத்திற்கு காரணம் என மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.