களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
46 வயதுடைய கைதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது