கனடாவில் முக்கிய அரசாங்க நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோவில் வைத்தியசாலைகள், நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
நகரசபைகள், பல்கலைக்கழகங்கள், பாடசாலை சபைகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான சைபர் தாக்குதல்கள் மூலம் பலரின் தகவல்களை கசியச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் தகவல் மற்றும் தனியுரிமை ஆணையாளர் பெற்ரிசியா கோசீம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
முக்கிய அரச நிறுவனங்களில் தகவல்களை திருடும் நோக்கில் இவ்வாறு சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.