கனாவின் கியூபெக் மாகாணத்தில் பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்கள் செல்பேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.
தற்போதைய குளிர்கால விடுமுறை காலத்தின் பின்னர் கியூபெக் பாடசாலை மாணவர்கள் வகுப்பறைகளில் செல்பேசி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கனடாவின் ஒன்றாரியோ மாகாண பாடசாலைகளில் இந்த தடை அமுலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் கல்வி கற்பதில் கவனம் சிதறுவதனை தடுக்கும் வகையில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சில தேவைகளுக்கு மட்டும் அலைபேசி பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளின் ஆசிரியர்களினால் இந்த அனுமதி வழங்கப்பட உள்ளது.
தடையை மீறி செல்பேசி பயன்படுத்தும் மாணவர்களுக்கு பாடசாலை சபைகளினால் தண்டனை நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.