யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 வயதுடைய இளைஞன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (27) உயிரிழந்துள்ளதாக யாழ். வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கடந்த வாரத்தில் டெங்கு நோயினால் மூவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், தாவடி பகுதியைச் சேர்ந்த மதுரன் கிருதிஷ் என்ற 11 மாத ஆண் குழந்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தது.
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி பயின்ற குணரத்தினம் சுபீனா என்ற மாணவி கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
டிசெம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 1,000 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.