மட்டக்களப்பு- கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருளொன்று இன்று (28) காலை ஒதுங்கியுள்ளது.
அப்பகுதி கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அப்பொருள் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதனை களுவாஞ்சிக்குடி பொலிஸாரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இதனை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.