கனடாவில் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர். கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் யெலோனைப் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எயார் டின்டி விமான சேவைக்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் விபத்திற்குள்ளானதில் சிலர் காயமடைந்திருந்தனர் என மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டியாவிக் பிராந்தியத்தின் வைரச் சுரங்கமொன்றிற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் எட்டு பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடன் செயற்பட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தை தரையிறக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இவ்வாறு விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.