Sunday, December 22, 2024
Google search engine
Homeஇந்தியாவிஜயகாந்த் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

விஜயகாந்த் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் இன்று வைக்கப்பபட்டிருந்தது. ஏராளமான மக்கள் அலைகடல் என திரண்டு வந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை எழும்பூர், வேப்பேரி வழியாக கோயம்பேடு வந்தடைந்தது. மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயம்பேடு தேமுதிக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து விஜயகாந்தின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு நடைமுறை செய்தனர். விஜயகாந்தின் கால்களைத் தொட்டு வணங்கி அவரது மனைவி பிரேமலதா இறுதி மரியாதை செலுத்தினார். அனைத்து சடங்குகளும் முடிந்து இறுதியாக இரவு 7 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே என விஜயகாந்த் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விஜயகாந்தின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு நடைமுறை செய்தனர். விஜயகாந்தின் கால்களைத் தொட்டு வணங்கி அவரது மனைவி பிரேமலதா இறுதி மரியாதை செலுத்தினார். அனைத்து சடங்குகளும் முடிந்து இறுதியாக இரவு 7 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் “எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே” என விஜயகாந்த் குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செய்தபின் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments