மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணம் சொனராவில் உள்ள சிடெட் ஒபெகன் பகுதியில் நேற்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, நிகச்சி நடைபெற்ற பகுதிக்குள் நுழைந்த கும்பல் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக சுட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசா படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடி நடத்திவிட்டு தப்பியோடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.